விருதுநகர் அருகே குப்பையில் செல்லரித்த ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அய்யனார் காலனியில் உள்ள ஆற்றோடை பகுதி குப்பையில் யாரோ அடையாளம் மர்ம நபர்கள் செல்லரித்த மற்றும் கிழிந்த நிலையில் ரூ.1000 நோட்டுக்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீசியுள்ளனர். இதை அப்பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருள்களை பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கணேசன், காட்டுராஜா ஆகியோர் எடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அதில், ரூ.1000 ரூபாய் தாள்கள் கொண்ட 4 கட்டுகள் இருந்துள்ளது.
இதை அப்பகுதி மக்கள் பார்த்து விட்ட நிலையில் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து கிழிந்தும், செல்லரித்து போன ரூ.1000 தாள்கள் கொண்ட 4 கட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரூபாய் தாள்களின் உண்மைத் தன்மை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் கள்ள நோட்டு இல்லை என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அய்யனார் நகரைச் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் சனிக்கிழமை இரவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், குப்பை மேட்டில் வீசப்பட்ட பணம் கணக்கில் வராத பணமா அல்லது செல்லரித்ததால் வீசினார்களா என்பது குறித்து அப்பகுதியில் தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே 1000 ரூபாய் தாள்கள் கொண்ட 4 கட்டுக்களை வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், இதுவரையில் பணத்திற்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை என வருவாய் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.