விருதுநகர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை மானபங்கம் செய்த இளைஞரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியில் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார்(41). இவர் சிவகாசியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஷோபனா(15) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் இங்குள்ள பள்ளியில் 9-ம் படித்து வருகிறார். இவர் கடந்த 4 நாள்களுக்கு முன்பு திடீரென காணமல் போனாராம். இதையறிந்த தந்தை உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் விசாரித்துள்ளார். அதில், சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த சிவாவின் மகன் எபிரோன்(21) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றதும், சிறுமியை மானபங்கமும் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
எனவே இது தொடர்பாக கிறிஸ்டோபர் ஜெயக்குமார் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்து சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.