விருதுநகர் அருகே திருமணமான பெண் மாயம்: தந்தை புகார்

விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(60). இவரது மகள் நாகஜோதி(22), ஆமத்தூர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசியப்பன் என்பவருக்கும் திருமணமாகி
Updated on
1 min read

விருதுநகர் அருகே திருமணமான பெண்ணை காணவில்லையென தந்தை வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார்.

விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(60). இவரது மகள் நாகஜோதி(22), ஆமத்தூர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசியப்பன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளான நிலையில் கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கன்னிசேரிபுதூர் கிராமத்தி்ல் நடைபெறும் திருவிழாவிற்காக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மகள் நாகஜோதியை அழைத்து வந்தாராம்.இதையடுத்து, சனிக்கிழமை இரவு வெளியே சென்று வருவதாக கூறி நாகஜோதி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருப்பதை கண்டு சுப்புராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உறவினர் மற்றும் தோழி வீடுகளிலும் தேடியதில் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லையாம்.

இது தொடர்பாக சுப்புராஜ் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணமல் போன நாகஜோதி குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com