செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் மதிப்புள்ள கரும்புக் கழிவு எரிந்துச் சாம்பலானது. இந்த தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கழிவு (பக்காஸ்) மலை போல் குவிக்க வைக்கப்பட்டுள்ளது. மலைப்போல் குவிக்கப்பட்டுள்ள கரும்புக் கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் ஆலைப் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலைப்பகுதியில் வெல்டிங் பணி நடந்ததாகத் தெரிகிறது. அப்போது, தீ பொறி பறந்து அருகில் இருந்த கரும்புக் கழிவில் பட்டு தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிகிறது. தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்புப் படையினர் விரைந்துச் சென்று தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் ஆயிரக்கணக்கான மதிப்புள்ள கரும்புக்கழிவு எரிந்து சாம்பலானாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.