விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே விடத்தக்குளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேய்வேந்திரன்(42). இவர் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். அதோடு, இவருக்கு அடிக்கடி
Updated on
1 min read

விருதுநகர் பகுதியில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில்   3 பேர் உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே விடத்தக்குளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேய்வேந்திரன்(42). இவர் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். அதோடு, இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவும் வயிற்று வலி ஏற்பட்டு வேதனையால் அவதிப்பட்டாராம். இதனால் மனம் உடைந்த தேய்வேந்திரன் தோட்டப்பயிருக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக் கொல்லி விஷத்தை அருந்தினாராம்.

இதை அவரது குடும்பத்தினர் பார்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் கலையரசன்(21) என்பவர் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தெய்வேந்திரன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். 

மற்றொரு சம்பவம்:

விருதுநகர் அருகே காரியாபட்டியை அடுத்த அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(55). இவர் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவுக்கு பின் அருகில் உள்ள புதுவீட்டிற்கு தூங்குவதற்காக சென்றாராம். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் கணவர் எழுந்து வராததை அறிந்து மனைவி பஞ்சு(50) புதுவீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு, கணவர் மல்லாந்தநிலையில் கண்களில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்த கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாராம். இது தொடர்பாக உடனே காரியாபட்டி காவல் நிலையத்தில் பஞ்சு புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அருள்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  மலைக்கனியின் என்பவரின் மகன் சாமி(31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது இவர் குடும்பத்தினரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுமாம். அதேபோல், ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியில் சென்று வந்தவர் வீட்டிற்குள் வந்ததும் தலைசுற்றி கீழே விழுந்து உயிரிழந்தாராம். இது தொடர்பாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் மலைக்கனி புகார் செய்தார். அதையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து சாமியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com