விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரி கட்டுக்களை கடத்தியதாக 2 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே எவ்வித அனுமதியின்றியும் வாகனத்தில் கடத்திச் சென்றதாக இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததோடு, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 1600 கருந்திரி கட்டுக்களையும்
Updated on
1 min read

விருதுநகர் அருகே எவ்வித அனுமதியின்றியும் வாகனத்தில் கடத்திச் சென்றதாக இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததோடு, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 1600 கருந்திரி கட்டுக்களையும் ஆமத்தூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருகே மத்தியசேனை-சங்கரலிங்காபுரம் சாலையில் செவ்வாய்கிழமை இரவு காவல் ஆய்வாளர் அப்பாத்துரை தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அச்சாலை வழியாக வந்த வாகனம் போலீஸாரை நிற்பதை பார்த்த திடீரென நின்று காட்டு பாதையில் திரும்ப முயற்சித்தனர். பின்னர் விரைவாக சென்ற போலீஸார் சுற்றிவளைத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் சாக்கு பைகைகளில் 1600 கருந்திரி கட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வாகன ஓட்டுநரிடம் விசாரணை செய்ததில் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த பர்வதரின் மகன் சொக்கப்பன்(40) என்றும், இதே பகுதியைச் சேர்ந்த பட்டாசு ஆலை தொழிலாளி சோமசுந்தரம் என்கிற விவரம் தெரிந்தது. மேலும், இங்கிருந்து மத்தியசேனை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் குறிப்பிட்ட இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், வாகனம் மற்றும் அதிலிருந்து கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com