விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் சென்ற வெடிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 29 மூடை மணிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாகன ஒட்டுநரையும் புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே ஆமத்தூர்-மூளிப்பட்டி சாலை வழியாக இரவு நேரங்களில் பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை வாகனங்களில் கடத்திச்செல்லப்படுவதாக மாவட்ட எஸ்.பிக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்குமாறு ஆமத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காவ்ல ஆய்வாளர் ராமநாராயணன் தலைமையில் குறிப்பிட்ட சாலையில் புதன்கிழமை அதிகாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் பட்டாசுகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் 29 மூடை மணி மருந்துகள் இருப்பது தெரியவந்தது.
உடனே இது தொடர்பாக மூளிப்பட்டியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் கண்ணனிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது இப்பகுதியில் இருந்து மூளிப்பட்டி பகுதியில் மிக்கி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் தெரிவித்தாராம். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வாகன ஓட்டுநரான கண்ணனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.