விருதுநகர் அருகே ரயில் முன்பாய்ந்து பேருந்து நடத்துநர் தற்கொலை

விருதுநகர்-கள்ளிக்குடி இடையே கே.உசிலம்பட்டி அருகே உள்ள ஆளில்லாத  ரயில்வே கிராசிங் தண்டவாள பகுதியில் படுகாயம் அடைந்து கைகள் துண்டான நிலையில் ஒருவர் உயிரிழந்து
Updated on
1 min read

விருதுநகர் அருகே ரயில் முன்பாய்ந்து அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் புதன்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்-கள்ளிக்குடி இடையே கே.உசிலம்பட்டி அருகே உள்ள ஆளில்லாத  ரயில்வே கிராசிங் தண்டவாள பகுதியில் படுகாயம் அடைந்து கைகள் துண்டான நிலையில் ஒருவர் உயிரிழந்து கிடந்தாராம். இதை வியாழக்கிழமை காலையில் அப்பகுதி பொதுமக்கள் தோட்டத்திற்கு செல்லும் போது பார்த்துள்ளனர். இதையடுத்து உடனே விருதுநகர் ரயில்வே காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து விரைந்து வந்த போலீஸார் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது யார் என விசாரித்தனர்.

அதில், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே பொக்கலாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னசுப்பு என்பவரின் மகன் கண்ணன்(48) என்பதும், விருதுநகர் அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலக பணிமனையில் நடத்துனராகவும் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. உடனே சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரயில்வே காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com