விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் கடந்த 2011,2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் தங்களது கல்வி தகுதிக்கான பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க அரசு சலுகை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இம்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றுகள் மூலம் நேரிடையாக அலுவலகத்திலோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது இணைய தளம் வழியாகவோ வருகிற 7-ம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.