தமிழ்நாடு கைத்தறித்தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் கைவினைப் பொருள்களின் கண்காட்சி மார்ச் 7-முதல் 16 வரை கோவையில் நடைபெற உள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள மீனாட்சி ஹாலில் நடைபெறும் இக்கண்காட்சியில், சுமார் 100 கைவினைஞர்கள் தங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க கைத்திறன் மற்றும் தேசி்ய மரபு சார்ந்த படைப்புகளை விற்பனைக்கு வைக்க உள்ளனர்.
மேலும், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.