தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை மீனவர்களால் சிறைபிடித்து விடுவிப்பு

நாகை மாவட்டம்,கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்களால் நடுக்கடலில் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர்
தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை மீனவர்களால் சிறைபிடித்து விடுவிப்பு
Published on
Updated on
1 min read

நாகை மாவட்டம்,கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்களால் நடுக்கடலில் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,இலங்கை மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 5 பேர் வியாழக்கிழமை கோடியக்கரையில் கரைசேர்ந்தனர். பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள் அகஸ்டீன்(42),முனுசாமி (39), பூரணம் (55), உ.செல்வம் (46),மாணிக்கம் (26),பாண்டி (37),செல்வம் (37)ஆகிய 7 பேரும் மீனவர்கள்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்த மீனவர்களை புதன்கிழமை நள்ளிரவில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இதன் பேரில் போலிசார் விசாரணை நடத்தினர். இதனிடையே,சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் விடிவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் வெளியானது.

5 பேர் விரட்டியடிப்பு:

இந்த நிலையில்,பாம்பனில் இருந்து ஒரு படகில் 2-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டி,சேகர்,முனீஸ்,முருகானந்தம்,டோாமினிக் ஆகிய 5 மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர். இவர்கள் 5 பேரிம் வியாழக்கிழமை பகல் கோடியக்கரை படகுத்துறைக்கு வந்தடைந்தனர

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com