நரிக்குடி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: முதியவர் கைது

நரிக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்தது தொடர்பாக முதியவரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

நரிக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்தது தொடர்பாக முதியவரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேதுராமனின் மனைவி நாகரத்தினம்(45). இதே ஊரைச் சேர்ந்தவர் செல்வம்(70). இவர் வெள்ளிக்கிழமை காலையில் நாகரத்தினம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறான நோக்கத்துடன் கையையும், சேலையையும் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றாராம். அதையடுத்து, சத்தம் போட்டு கதவை திறந்து கொண்டு தெருவுக்கு வந்தாராம். பி்ன்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை கண்டு தப்பியோடினாராம்.
    இது தொடர்பாக நாகலட்சுமி நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வீட்டிற்கு பின்புறம் பதுங்கியிருந்த செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com