விருதுநகர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் சாவு

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த ஆவுடைதங்கத்தின் மகன் பொன்ராஜ்(49). இவர் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் கன்னிசேரியிலிருந்து ஆர்.ஆர்.நகர்
Updated on
1 min read

விருதுநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த ஆவுடைதங்கத்தின் மகன் பொன்ராஜ்(49). இவர் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் கன்னிசேரியிலிருந்து ஆர்.ஆர்.நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாரம். அப்போது, காமராஜர்புரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில்  எதிரே வந்து எதிர்பாரதவிதமாக மோதினாராம்.

இதில், பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தாராம். பின்னர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தாராம். இது தொடர்பாக பொன்ராஜின் தந்தையார் ஆவுடைத்தங்கம் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கணேஷ்குமார் மீது மீது வழக்கு பதிந்து விபத்து தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com