விருதுநகரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். இதில், ஒவ்வொரு 100 கி.மீ சாலையை மக்களவை உறுப்பினரி்ன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விபத்துக்களை தவிர்ப்பதே இந்த அமைப்பின் நோக்கம் ஆகும். இதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பினர் செய்திருந்தனர். இதில், பல்வேறு நகர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.