அடையாளம் தெரியாத நபர்களால் விவசாயி வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட கொங்கராயக்குறிச்சி என்ற கிராமத்தில் வயல் வெளி
அடையாளம் தெரியாத நபர்களால் விவசாயி வெட்டிக் கொலை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட கொங்கராயக்குறிச்சி என்ற கிராமத்தில் வயல் வெளி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பிச்சையா (62) அடையாளம் தெரியாத நபர்களால் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் பிச்சையாவின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கொங்கராயக்குறிச்சியில் உள்ள காமராஜர் சிலையை சேதப்படுத்தினர். மேலும், அதே பகுதியில் இருந்த ஹோட்டல், வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன.

மோட்டார் சைக்கிள் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com