காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் தொலைதூர மருத்துவ சேவை மையத்தில் மார்ச் 14-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மூட்டு வலி, எலும்பு முறிவு மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.