திருச்சுழி அருகே விஷம் குடித்த இளைஞர் சாவு

விருதுநகர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமியின் மகன் துரைகார்த்திக் பிரபு(21). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு குடிதண்ணீர் என நினைத்து பயிருக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த விஷத்தை எடுத்து அருந்தி மயங்கி விழுந்து கிடந்தாராம். இதை அவரது உறவினர்கள் பார்த்து உடனே அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக அவரது உறவினர் ஆனந்தகுமார் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com