விருதுநகர் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் மானபங்கம்: இளைஞர் உள்பட 8 பேர் மீது வழக்கு

Updated on
1 min read

விருதுநகர் அருகே இளம்பெண்ணை திருணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மானபங்கம் செய்த இளைஞர் உள்பட 8 பேர் மீது சனிக்கிழமை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமியின் மகள்(17). இப்பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவரின் மகன் செல்லத்துரை(20). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களாக பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணை தனியாக சந்தித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மானபங்கம் செய்தாராம். இது பெண்ணின் தந்தைக்கு தெரியவந்ததை தொடர்நது உறவினர்களுடன் செல்லத்துரை வீட்டிற்கு சென்று திருமணம் செய்யும் படி கூறியதற்கு கண்டபடி பேசியுள்ளனர்.

இது தொடர்பாக பெண்ணின் தந்தை கந்தசாமி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்லத்துரை, அவரது தந்தை அய்யாவு, தாயார் பூச்சியம்மாள், சகோதரர்கள் அழகுராஜன், குட்டிப்பாண்டி உள்ளிட்ட உறவினர்கள் 8 பேர் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இளைஞரின் தந்தை அய்யாவு மற்றும் குட்டிப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com