விருதுநகர் அருகே குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை

விருதுநகர் அருகே அல்லம்பட்டி ஆத்துமேட்டுப்பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(25). இவருக்கும் சிவகாமிக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கருப்பசாமி எந்த வேலைக்கும்
Updated on
1 min read

விருதுநகர் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி ஆத்துமேட்டுப்பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(25). இவருக்கும் சிவகாமிக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கருப்பசாமி எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த வந்ததால் அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது. இதேபோல், வெள்ளிக்கிழமையும் குடும்பத் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்றாராம். இதனால் தனியாக இருந்ததால் மன உளைச்சல் அடைந்த கருப்பசாமி சனிக்கிழமை வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து உறவினர்கள் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com