விருதுநகர் அருகே கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

விருதுநகர் அருகே கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி கொலையா, தற்கொலையா என ஆமத்தூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி கொலையா, தற்கொலையா என ஆமத்தூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ளது செங்குன்றாபுரம் கிராமம். இக்கிராமம் அருகே உள்ள கண்மாய் வழியாக தோட்டங்களுக்கு வேலைக்கு கிராம மக்கள் சென்றுள்ளனர். அப்போது, கண்மாய் நடுப்பகுதியில் 40 வயது மதிப்புடைய ஆண் சடலமும், அருகில் விஷ குப்பியும் கிடந்துள்ளது.இதைப்பார்த்து உடனே ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com