அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதி 3 பேர் சாவு: 3பேர் படுகாயம்

அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் திங்கள்கிழமை இரவு 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் உடன் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உறவினர்
Updated on
1 min read

அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் திங்கள்கிழமை இரவு 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் உடன் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உறவினர் வீட்டுக்கு வந்து ஊருக்கு திரும்பும் வழியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(45). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள முருகன் கோயிலில் அர்ச்சராக பணியாற்றி வருகிறாராம். இவரது உறவினர்களான  திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த கிட்டு என்ற கிருஷ்ணன்(45) மற்றும் அவரது நண்பர்களான 5 பேர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விருந்தினர்களாக வந்தார்களாம். பின்னர் இங்கிருந்து ஒரு வாடகைக் காரில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலிக்கு திரும்பினார்களாம். அந்தக் காரை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சேவுகராஜன்(35) ஓட்டினாராம்.

அப்போது, அருப்புக்கோட்டையை அடுத்த சுக்கிலநத்தம் அருகே சென்ற போது எதிர்பாரதவிதமாக கார் கட்டுபாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் கிட்டு என்ற கிருஷ்ணன்(45), அவரது நண்பர்களான இசக்கிமுத்து(42), மணிகண்டன்(45) ஆகியோர் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உடன் வந்த பாலமுருகன்(32), ராமு(36) மற்றும் ஓட்டுநர் சேவுகராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு உடனே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com