விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த ரூ.13,204 ஐ திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து கடையின் மேற்பார்வையாளர் நரிக்குடி காவல் நிலையத்தி்ல் செவ்வாய்கிழமை புகார் செய்தார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்துக் கொண்டு விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் ரொக்கப்பணத்தை டிராயரில் வைத்து பூட்டிச் சென்றார்களாம்.இந்த நிலையில் மறுநாள் காலையில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் நரிக்குடி சாமிநாதனுக்கு தகவல் தெரிவித்தார்களாம். அதன் அடிப்படையில் விரைந்து வந்து டாஸ்மாக் கடைக்கு வந்து பார்க்கையில் உடைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து உள்ளே டிராயரை பார்க்கையில் அதிலிருந்த ரூ.13,204 ஐ யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இது தொடர்பாக நரிக்குடி காவல் நிலையத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் சாமிநாதன் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையில் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.