லஞ்சம் வாங்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார்

வழக்கை சாதகமாக முடித்துத் தருவதாகக் கூறி, குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ரூ.1,500 லஞ்சமாக
லஞ்சம் வாங்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார்
Updated on
1 min read

வழக்கை சாதகமாக முடித்துத் தருவதாகக் கூறி, குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ரூ.1,500 லஞ்சமாக வாங்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அகிலாங்கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (45). இவர் அப்பகுதியில் மனித உரிமை அமைப்பு ஒன்றை நடத்தி, அந்த அமைப்பை தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றி வந்ததாக வல்லம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் சேகர் மீது வல்லம் போலீசார் பிப்ரவரி 7ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் பெறுவதற்கு முதல் தகவல் அறிக்கை தருவதற்கும், பின்னர் வழக்கை சாதகமாக முடித்துத் தருவதாகவும் அதற்கு ரூ.1,500 லஞ்சம் வேண்டும் என்றும் சேகரிடம் காவல்துறை உதவி ஆய்வாளர் பிரபாகரன் கேட்டுள்ளார்.

இதன்படி, தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பிரபாகரனிடம், சேகர் ரூ.1,500 கொடுத்தார். இதனை வாங்கிக் கொண்ட பிரபாகரனை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com