விருதுநகர் நகராட்சியில் சொத்து மற்றும் தண்ணீர் வரி செலுத்தாவர்களின் இணைப்பை துண்டிப்பு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் கடந்த 10 நாள்களாக சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி செலுத்தும் படி ஒவ்வொரு வார்டு, வார்டாக வாகனத்தில் ஒலி பெருக்கிகள் மூலம் முன்னறிவிப்புச் செய்யப்பட்டு வந்தது. அதோடு, நகராட்சி நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் தகவல் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருப்பவர்களின் குடியிருப்புகளுக்கே வெள்ளிக்கிழமை முதல் நேரில் அதிகாரிகள் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், அபராதத்துடன் வரி செலுத்தாமலும், அதற்கு சரியான விளக்கம் அளிக்காமல் இருப்பவர்களின் குடிநீர் இணைப்பு துண்டித்தும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் 29, 26, மற்றும் 27-வது வார்டுகளில் வரி செலுத்தாமலும், உரிய விளக்கம் அளிக்காமலும் இருந்த 4 பேர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் மீண்டும் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கான வரியுடன் அபராத தொகையையும் சேர்த்து செலுத்தினால் மட்டுமே, மீண்டும் இணைப்பு வழங்கப்பட இருப்பதாக நகராட்சி தலைவர் சாந்தி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.