விருதுநகரில் ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் 5 சவரன் நகை திருட்டு

விருதுநகர் அருகே ஓய்வு பெற்ற அலுவலரின் வீட்டில் பூட்டை உடைத்து 5 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே ஓய்வு பெற்ற அலுவலரின் வீட்டில் பூட்டை உடைத்து 5 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த நேருஜி நகரைச் சேர்ந்தவர் சுப்பையா(80). இவர் சனிக்கிழமை திண்டுக்கல்லுக்கும், இவரது மனைவி மதுரைக்கும் சென்றார்களாம். இந்நிலையில், அதே தெருவில் வசித்து வரும் அவரது மகள் பாண்டிமீனா வீட்டைச் சுத்தம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை வந்துள்ளார்.  அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே தனது தந்தையை தொடர்பு கொண்டுள்ளார்.அதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 5 சவரன் நகை மற்றும் வெள்ளிக்குத்து விளக்கு ஆகியவைகளை மா்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற அலுவலர் சுப்பையா விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com