விருதுநகரில் நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து கீழே தள்ளி 3 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் ஆண்டிகிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் என்பவரின் மனைவி கமலாதேவி(60). இவர் புதன்கிழமை காலையில் மாரியம்மன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பெரிய கருப்பன் தெருவைக் கடந்து போகும் போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 25 வயதுடைய மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டியை தள்ளிவிட்டுள்ளார். பின்னர் சுதாரித்து எழுவதற்குள் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பியோடினாராம்.
இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கமலாதேவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை கீழே தள்ளி நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.