கடை உரிமம் வழங்க ரூ.4,000 லஞ்சம்: அலுவலக உதவியாளர் கைது

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அடகுக் கடை நடத்துவதற்காக உரிமம் கேட்டு
கடை உரிமம் வழங்க ரூ.4,000 லஞ்சம்: அலுவலக உதவியாளர் கைது
Updated on
1 min read

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அடகுக் கடை நடத்துவதற்காக உரிமம் கேட்டு மதுரை தாலுகா அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்ப்ததை தாலுகா அலுவலகத்தில் சி1 பிரிவில் இருக்கும் அலுவலக உதவியாளர் கண்ணகி(35) பரிசீலித்து மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து செல்வராஜ், கண்ணகியை கேட்ட போது, ரூ.4 ஆயிரம் லஞ்சம் தந்தால் தான் உரிமம் வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து  மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் இசக்கி ஆனந்தன் தலைமையிலான அதிகாரிகள், ரசாயனம் தடவிய பணத்தை அவரிடம் கொடுத்தனர்.

பணத்தை எடுத்துக் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவியாளர் கண்ணகியிடம் செல்வராஜ் கொடுத்தார். அப்போது அங்கே மறைந்திருந்த ஊழல் தடுப்பு அதிகாரிகள் கண்ணகியை கையும் களவுமாக

கைது செய்தனர. அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

தற்போது லஞ்ச ஊழல் வழக்கில் கண்ணகியின் கணவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com