விருதுநகரில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்: தந்தை புகார்

விருதுநகர் அருகே இளம்பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே இளம்பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார்.

விருதுநகர் அருகே கருப்பசாமி நகரைச் சேர்ந்த கனகராஜின் மகள் கனகவள்ளி(27). இவரது மகளுக்கும் முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கனகவள்ளி தனது குழந்தையுடன் கருப்பசாமி நகரில் உள்ள தந்தையார் வீட்டில் குடியிருந்து வருகிறார். இதையடுத்து புதன்கிழமை மாலையில் வெளியே சென்று வருவதாக தனது குழந்தையுடன் சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும்  எங்கிருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தை கனகராஜ் பாணடியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com