விருதுநகர் அருகே வாகனத்தில் கடத்திய கருந்திரி கட்டுக்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் சென்ற ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 5 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை சனிக்கிழமை சூலக்கரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் சென்ற ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 5 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை சனிக்கிழமை சூலக்கரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் இருந்து கன்னிசேரி பகுதிக்கு கருந்திரி கட்டுக்களை கடத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பட்டம்புதூர் விலக்கு அருகே வந்த வேனை மறித்து சோதனையிட்ட போது உள்ளே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் 5 ஆயிரம் கருந்திரி கட்டுக்கள் சாக்கு பைகளில் சுற்றப்பட்டு இருந்தது

பின்னர் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்ததில் சிவகாசி அருகே கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பாலமுருகன்(21) என்பதும், கன்னிசேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரியவந்தது. இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். அதோடு, வாகனம் மற்றும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com