விருதுநகர் அருகே ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் ஸ்ரீராமநவமி விழா

விருதுநகர் அருகே மீசலூர் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் ஸ்ரீஷீரடி சாய்பாபா ஜெயந்தி மற்றும் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பால் அபிஷேக
Updated on
1 min read

விருதுநகர் அருகே மீசலூர் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் ஸ்ரீஷீரடி சாய்பாபா ஜெயந்தி மற்றும் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பால் அபிஷேக நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு சாய்பாபா திருக்கோயில் வளாகத்தில் காலையில் ஷீராடி சாய்பாபா பாதங்களுக்கு பக்தர்கள் நேரடியாக பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமம் வாசித்தல், சாய் பஜன், மஹா தீபாரதனை ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீஷீரடி சாய்பாபாவை பற்றிய சொற்பொழிவை ரா.ஞானக்குமார் வழங்கினார்.

இத்திருக்கோயிலில் ஸ்ரீராமநவமி விழாவில் வழிபாடு நடத்தினால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதால் விருதுநகர், சூலக்கரை, கட்டையாபுரம்,  குரமாலிரங்காபுரம், மீசலூர், கருப்பம்பட்டி, சீனியாபுரம், வள்ளியூர், ஆமத்தூர், எல்கைபட்டி, கூரைக்குண்டு, சங்கராலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஷீரடி சாய்பாபாவின் தரிசனம் பெற்றனர்.

இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருக்கோயிலின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல், பெண் பக்தர்களுக்கு பூ, பழம், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களும் அளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாய்பாபா மந்திர் குழுமத்தின் நிர்வாகி ராகவநாயுடு மற்றும் வெங்கடேஸ்வரா மிஷன் அறக்கட்டளை  நிர்வாகிகள் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com