விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி தலைவரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை
Updated on
1 min read

ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி தலைவரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சியிலும் கிராம சபைக்கூட்டம் நடத்துவதற்கு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். இதில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் முத்துவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கிராமத்தில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள், வரவு, செலவு தொடர்பாக விவாதித்தனர். பின்னர் பசுமை குடியிருப்பு மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பயனாளிகள் ஒப்புதல், தூய்மை திட்டம் குறித்தான தீர்மானம் கொண்டு வந்தனர். அதையடுத்து கழிவு நீர் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாகவும் தீர்மானம் கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தினர்.

ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் குறித்த தீர்மானம் கொண்டு வருதல் தொடர்பாக எதுவும் பேசாமல் வெளியேறிச் சென்ற ஊராட்சி தலைவர் சேதுராமனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதையடுத்து, தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com