சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு: கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

ராஜபாளையம் பகுதியில் சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
Updated on
1 min read

ராஜபாளையம் பகுதியில் சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து சத்திரப்பட்டி வட்டார சிறு விசைத்தறி மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் மா.நட்சத்திர திலகம் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படும் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றனர். இதில், மட்டும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை கூலி ஒப்பந்தம் ஏற்படுவது நடைமுறையில் உள்ளது.

மனித நேயத்தோடு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மட்டும் சட்டவிதிமுறைகளை மதித்து 3 ஆண்டு கூலி உயர்வை வழங்கிவிட்டன. அதே ஒப்பந்தத்தில் கையொழுத்திட்ட மருத்துவதுணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக முதல் வருடம் வழங்கிவிட்டு, 2,3-ம்  ஆண்டுக்கு கூலி உயர்வு வழங்க முடியாது என்கின்றனர். ஆனால், தங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்காத விசைத்தறி உரிமையாளர்களுக்கு வேலை செய்வதற்கான பாவு கொடுக்கமாட்டோம் என மிரட்டுகின்றனர்.

இதில், வேறு வழி இல்லாத காரணத்தால் மே-1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த ஏப்.4ம் தேதி தொழிலாளர் நல அலுவலரிடம் நேரில் மனுக் கொடுத்தோம். அதன் அடிப்படையில் கடந்த 3-ம் தேதி பேச்சுவார்த்தை கமிட்டி அமைத்து, சத்திரபட்டியில் மாலையில் வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடந்தது. வட்டாட்சியரும் ஒப்பந்தத்தை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அதற்கு சட்டப்படி நாங்கள் பிரச்னையை சந்திக்க தயாராக உள்ளோம் என்றும் கூலி உயர்வு வழங்க முடியாது என கூறி வருகின்றனர். அதனால் மருத்துவதுணி உற்பத்தியாளர் சங்த்தின் தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கூலி உயர்வு வழங்கி குடும்பங்களை காப்பாற்றுமாறு ஆட்சியர் வே.ராஜாராமனிடம் நேரில் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com