விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 27 ஆயிரம் விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இதுவரையில் 27 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் ஆண்களை விட பெண்கள் தான்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இதுவரையில் 27 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 154 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஏப்.24-ம் தேதி முதல், தொடர்ந்து மே 6-ம் தேதி வரையில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளன.   இதுவரையில் இப்பணிக்கு 27 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு குறைந்தது பள்ளி இறுதி வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பதால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர்.  

இம்மாவட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு தேர்வு மையங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.எம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவைகளில் ஆண்களுக்கும், விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பெண்களுக்கும் என பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு நாள்கள் வரையில் உள்ளதால் விண்ணப்பங்கள் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்பணிக்கான எழுத்துத் தேர்வு தேர்வு வருகிற 31-ம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com