100 நாள் திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை

விருதுநகர் அருகே தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
100 நாள் திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை
Updated on
1 min read

விருதுநகர் அருகே தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சத்திரரெட்டியபட்டியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைந்த நாள்கள் வேலை வழங்குகின்றனர். அதனால் 100 நாள்கள் வரையில் வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக்ததை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட 4 பேரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பினர்.

இது குறித்து சத்திரரெட்டியபட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இத்திட்டத்தில் 2013ல் 40 நாள்கள் மட்டுமே வேலை கொடுத்தனர். கடந்தாண்டில் 50 நாள்கள் மட்டுமே வேலை அளித்தனர். நிகழாண்டில் இதுவரையில் வேலை வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி தலைவி பிரேமாவிடம் முறையிட்டாலும், நமது ஊராட்சிக்கு இத்திட்டத்தில் வேலை கிடையாது என்றும், அதை நான் ஏற்பாடு செய்ய முடியாது என்பதோடு எங்கும் புகார் செய்யுங்கள் என்கிறார்.

மேலும், கிராம சபைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு தகவலும் தெரிவிப்பதில்லை. மே-1ம் தேதி நடந்த கூட்டத்திற்கு சென்றால் ஊராட்சி தலைவியின் கணவர் ஏன் வந்தீர்கள் என மிரட்டுகிறார். இனிமேல் 100 நாள் வேலை திட்டம் கேட்டால் கைது செய்வதாக கூறி போலீஸாரை வைத்து மிரட்டுகிறார். அதனால் வரும் கிராம சபைக் கூட்டத்தை உயர் அதிகாரிகளை கொண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், வேறு வேலை எதுவும் இல்லாத காரணத்தால் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மனு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com