சர்வாதிகாரத்துடன் செயல்படும் நரேந்திரமோடிக்கு இனி சறுக்கலே வந்துசேரும்: வி.நாராயணசாமி

சர்வாதிகாரத்துடன் பிரதமர் நரேந்திரமோடி செயல்படுவதால் வளர்ச்சித் திட்டங்கள் கிடப்பில் உள்ளதாகவும், தில்லி தேர்தலைப்போன்று அவருக்கு இனி சறுக்கலே வந்து சேரும் என்றார்

சர்வாதிகாரத்துடன் பிரதமர் நரேந்திரமோடி செயல்படுவதால் வளர்ச்சித் திட்டங்கள் கிடப்பில் உள்ளதாகவும், தில்லி தேர்தலைப்போன்று அவருக்கு இனி சறுக்கலே வந்து சேரும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான அவர் காரைக்காலில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது :  மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நரேந்திரமோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில்  ஒன்றைக்கூட ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டில் நிறைவேற்றவில்லை. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணம் மீட்பு, விலைவாசி குறைப்பு, ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் குறித்த வாக்குறுதிகள் பொய்த்துவிட்டது. தில்லி மக்கள் பாஜகவுக்கு தேர்தலில் மரண அடி கொடுத்துவிட்டார்கள். பிகாரிலும் இதே தோல்வி பாஜகவுக்கு நிச்சயம் கிடைக்கும். இனி அவருக்கு சறுக்கல்தான்.

நரேந்திரோடி, தமது அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கவில்லை. சர்வாதிகாரமாக அவர் செயல்படுவதால், திட்டங்கள் நிறைவேற்றமுடியவில்லை. பல்வேறு மாநிலங்களுக்கு ஆளுநர், துணை நிலை ஆளுநர் நியமனம், வங்கிகளுக்கு  தலைவர் நியமனம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு மறு பெயர் வைத்து நிறைவேற்றுகிறார் நரேந்திரமோடி. இதைத் தவிர வேறு எந்த புதிய திட்டங்களையும் இந்த அரசில் காணமுடியவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com