விருதுநகர் அருகே குருனை மருந்து உட்கொண்ட பள்ளி மாணவி சாவு

விருதுநகர் அருகே சர்க்கரையுடன் குருனை மருந்து கலந்து உள்கொண்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே சர்க்கரையுடன் குருனை மருந்து கலந்து உள்கொண்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே தவசலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியின் மகள் கருப்பாயி(14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் வலிப்பு போன்றவைகளால் அவதிப்பட்டு வந்தாராம். அதனால், மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணம் ஏற்படாத நிலையில் மனம் வெறுத்த கருப்பாயி சர்க்கரையுடன் கலந்து குருணை மருந்தை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உள்கொண்டாராம். இதையறிந்த பெற்றோர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் பாண்டி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com