விருதுநகர் அருகே  ஸ்டவ் வெடித்து இளம்பெண் சாவு

விருதுநகர் அருகே சமையல் செய்யும் போது மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து இளம்பெண் ஆடையில் தீப்பற்றியதால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே சமையல் செய்யும் போது மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து இளம்பெண் ஆடையில் தீப்பற்றியதால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி கண்மாய்பட்டியைச் சேர்ந்த குட்டி ராமரின் மகள் பிரேமா(17). இவர் இப்பகுதியில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தாராம்.

அப்போது, எதிர்பாரதவிதமாக மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து சிதறியதில் இளம்பெண் ஆடையில் தீ மளமள பரவியதால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com