

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்செந்தூரிலிருந்து மாபெரும் தொடர் ஓட்டப் பேரணி புறப்பட்டது.
பாஞ்சாலக்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 59-வது ஆண்டு விழா மற்றும் 29-வது ஆண்டு செந்திலாண்டவர் புண்ணிய தீர்த்தம் மற்றும் ஜோதியை கொண்டு செல்லும் மாபெரும் தொடர் ஓட்டப்பேரணி ஆகியன வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. திருச்செந்தூர் கட்டப்பொம்மன் மடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் பி.என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சௌ.கோவிந்தராஜ் ஜோதி தொடர் ஓட்டப்பேரணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற பிஆர்ஓ ஜெயபிரகாஷ், இந்திய காங்கிரஸ் ராமப்பா, திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் பி.பட்டாணி, உதவி ஆயவாளர் மீனா, தொழிலதிபர்கள் சர்க்கரை, நம்பி, முத்தையாபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயராஜ், மாநில நுகர்வோர் பேரவை தலைவர் ஏ.வி.பி.மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படையின் கௌரவதலைவர் சந்திரன், தலைவர் முருகராஜா, செயலர் மணிகண்டன், பொருளாளர் சிவராமன், துணைத்தலைவர் சதீஸ்குமார், துணைச்செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில் சித்தன்னன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.