விருதுநகர் மாவட்டத்தில் அங்கிகாரம் பெறாத பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர்கள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இம்மாவட்டத்தில் அரசு அங்கிகாரம் இல்லாமல் 18 நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளை எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் சேர்க்கக் கூடாது.
அந்த வகையில் அங்கிகாரம் பெறாத பள்ளிகளின் விவரம் வருமாறு: பெருந்தலைவர் காமராஜர் நர்சரி தொடக்கப்பள்ளி-சின்னவள்ளிக்குளம், கிரீன் ஆப்பிள் நர்சரி தொடக்கப்பள்ளி-சொக்கலிங்காபுரம், கிரீன் விஸ்டம் நர்சரி தொடக்கப்பள்ளி, பொன்பழனி நர்சரி தொடக்கப்பள்ளி-மல்லாங்கிணர், பஸ்ட் டெப் நர்சரி தொடக்கப்பள்ளி, லயன் நர்சரி தொடக்கப்பள்ளி-ராஜபாளையம், கிரேஸ் நர்சரி தொடக்கப்பள்ளி-முகவூர், கே.வி.டி.எஸ் நர்சரி தொடக்கப்பள்ளி-சிவகாசி, ஆட்ரல் அரசு கே.ஆறுமுகசாமி நர்சரி தொடக்கப்பள்ளி-விளாம்பட்டி, பத்ரகாளியம்மன் நர்சரி தொடக்கப்பள்ளி-திருச்சுழி, ரோஜா நர்சரி தொடக்கப்பள்ளி-பரளச்சி, விஸ்வாஸ் வித்யாலயா நர்சரி தொடக்கப்பள்ளி-மூன்றடைப்பு), குட்செபர்ட் நர்சரி தொடக்கப்பள்ளி-ஆலங்குளம், கலைவாணி நர்சரி தொடக்கப்பள்ளி-செவல்பட்டி, மாரியம்மன் நர்சரி தொடக்கப்பள்ளி, சந்திரா நர்சரி தொடக்கப்பள்ளி, ஆர்.ஜே.மந்த்ரா நர்சரி தொடக்கப்பள்ளி-விருதுநகர்.
எனவே மேற்குறிப்பிட்ட நர்சரி தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.