விருதுநகர் அருகே வாகன விபத்தில் முதியவர் சாவு

விருதுநகர் அருகே சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி(70). இவர் அருப்புக்கோட்டை சாலையில் காமராஜர் நினைவு மண்டபம் முன்பு புதன்கிழமை காலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.

இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com