விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறை பின்பற்றாத 4 ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தேர்வு தடைச்சட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 4 ஸ்கேன் மையங்கள்  கண்டறியப்பட்டு தாற்காலிகமாக உரிமம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தேர்வு தடைச்சட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 4 ஸ்கேன் மையங்கள்  கண்டறியப்பட்டு தாற்காலிகமாக உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மருத்துவத்துறை இணை இயக்குநர் கதிரேசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தற்போது, நமது நாட்டில் குழந்தை பிறப்பின் போது 1000 ஆண்களுக்கு 926 பெண் குழந்தைகள் பிறப்பதாகவும், தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 954 குழந்தைகள் பிறப்பது என்பது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும். இதற்கு முக்கிய காரணம் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சிசுவினை கருக்கலைப்பு செய்வதற்கு ஸ்கேன் பரிசோதனையில் சாத்தியமாகும்.இதற்காகவே உயர்நீதிமன்றத்தில் பாலின தேர்வு தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பாலினத் தேர்வு தடைச்சட்டத்தை மீறி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருவதாக மருத்துவத்துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் பாலினச் தேர்வு தொடர்பான விதிமுறைகள் ஒவ்வொரு ஸ்கேன் மையங்களிலும் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மருத்துவத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில், விதிமுறை  பின்பற்றாத 4 ஸ்கேன் மையங்களின் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறைகளை நிவர்த்தி செய்து அறிக்கை சமர்பித்த பின் மீண்டும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com