விருதுநகர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்: 1997 பேர் கைது

விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 812 பெண்கள் உள்பட 1997
விருதுநகர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்: 1997 பேர் கைது
Updated on
1 min read

விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 812 பெண்கள் உள்பட 1997 பேரை போலீஸார் கைது செய்தனர்.   

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உள்ள அஞ்சல் அலுவலக வளாகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், வட்டாரச் செயலாளர் மதுரை வீரன், நகர செயலாளர் காதர்முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உரமானியம் ரத்து, வேளாண்மை கடன்களுக்கு கூடுதல் வட்டி உள்ளிட்ட போன்றவைகளால் விவசாயிகள் நலிவைச் சந்தித்து வருகின்றனர். மேலும் விவசாயிகளை பாதிக்கச் செய்யும் விளைநிலங்கள் கையகப்படுத்தும் சட்டம்-2015ஐ எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் 17 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்தனர்.

இதேபோல், இம்மாவட்டத்தில் ஆர்.ஆர்.நகர், சிவகாசி, சாத்தூர் உள்பட 40 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  மொத்தம் 812 பெண்கள் உள்பட 1997 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com