தஞ்சை, திருவையாறு அரசினர் ஐடிஐ-களில் சேர 18-ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது

தஞ்சாவூர் மற்றும் திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் 18-ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மற்றும் திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் 18-ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வை.தனவேந்தன் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் மற்றும் திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களில் மாவட்ட கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 18-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 5-ஆம் தேதியாகும். தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்கண்ட தொழிற்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் (என்.சி.வி.டி.) சேர்க்கை நடைபெறுகிறது.

பொருத்துநர் பாடப்பிரிவில் சேர்வோர் 2 ஆண்டு படிக்க வேண்டும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடைசலர் (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), இயந்திர வேலையாள் (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), கம்மியர் மோட்டார் வண்டி (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), கம்பியாள் (2 ஆண்டு, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி), கட்டுமானப் பொருத்துநர் மற்றும் பற்றவைப்பவர் (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), உணவு தயாரிப்பவர் (1 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), பற்ற வைப்பவர் (1 ஆண்டு, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி), கம்மியர் இயந்திரக் கலப்பை (1 ஆண்டு, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி), தச்சர் (1 ஆண்டு, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி), எஸ்.சி.வி.டி-யில் மின்சார பணியாளர் (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி).

மாணவிகள் மட்டும் சேர்க்கைக்கான தொழிற்பிரிவுகள் (என்.சி.வி.டி.):

கணினி பிரிவு (கோபா) (1 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), கம்மியர் தொழிற்சாலை மின்னனுவியல் (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), கம்மியர் இயந்திர மிóன்னனுவியல் (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி).

தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும் திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருபாலரும் (எஸ்.சி.வி.டி) கீழ்காணும் தொழிற்பிரிவுகளில் சேரலாம். பொருத்துநர் பாடப்பிரிவில் சேர்வோர் 2 ஆண்டு படிக்க வேண்டும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடைசலர் (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), கம்மியர் மோட்டார் வண்டி (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), மின்சார பணியாளர் (2 ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி), பற்றவைப்பவர் (1 ஆண்டு, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 500 உதவித்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணச்சீட்டு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா 2 செட் சீருடைகள் சலுகைகளாக வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com