விருதுநகர் அருகே டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கத்தியால் குத்திய பணியாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் அருகே சிவந்திப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி(35). இவர் நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள டோல்கேட் வழியாக செவ்வாய்கிழமை நள்ளிரவில் ஓட்டிச் சென்றாராம். அப்போது, டோல்கேட் பணியாளர்கள் கட்டணம் செலுத்த கூறியதற்கு மறுத்துள்ளார். இதையடுத்து, இவருக்கும் டோல்கேட் பணியாளர் வெள்ளைச்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளைச்சாமி, பால்பாண்டியை கத்தியால் குத்தினாராம்.
இதையடுத்து படுகாயம் அடைந்த பால்பாண்டியை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதேபோல், பால்பாண்டி தாக்கியதில் வெள்ளைச்சாமியும் காயம் அடைந்ததாக புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.