தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்து 2 வயது குழந்தை உள்பட மூவர் சாவு

தூத்துக்குடி மட்டக்கடை முத்துசாமிதெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (32). இவர், அதே பகுதியில் சோடா தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
Updated on
1 min read

தூத்துக்குடி மட்டக்கடை முத்துசாமிதெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (32). இவர், அதே பகுதியில் சோடா தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தங்கவேல் அவரது மனைவி ராஜலட்சுமி, 2 வயது மகள் ஜனனி, தாய் லட்சுமி, சகோதரி முத்து ஆகியோருன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

திங்கள்கிழமை அதிகாலை திடீரென வீடு இடிந்து விழுந்ததில் 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் லட்சுமி, மற்றும் முத்து ஆகியோரை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 தொடர்ந்து, நடத்தப்பட்ட மீட்பு பணியில் தங்கவேல், அவரது மனைவி ராஜலட்சுமி, குழந்தை ஜனனி ஆகியோரின் சடலம் மீட்கப்பட்டது. தங்கவேல் தங்கியிருந்த வீடு மிகவும் பழமையானது என்பதால் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையில் பொது்ம்மியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com