திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் மூலம் ராணுவ பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள விவரம்:
திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஜூன் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சோல்ஜர் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் உதவியாளர், நர்சிங் உதவியாளர் வெட்னரி, சோல்ஜர்(பொதுப்பணி), சோல்ஜர் டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் ஆகிய பணியிடங்களுக்கான ஆள்கள் தேர்வு நடைபெற இருக்கிறது. இப்பணிக்கு 4.6.1992 மற்றும் 4.12.1997-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு வருகின்றவர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஜாதி இருப்பிடச் சான்றிதழ்களில் கட்டாயம் வட்டாட்சியரின் அலுவலக முத்திரை இருக்க வேண்டும். அதோடு, ராணுவ நுழைவு தேர்வுக்காக வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், கடைசியாக படித்த பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து கடந்த 6 மாதங்களுக்குள் பெற்ற நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். மேலும், கூடுதல் தகுதியாக என்.சி.சி., விளையாட்டுச் சான்றிதழ், கணினி பயிற்சி சான்றிதழ் மற்றும் சமீபத்தில் எடுத்த 12 புகைப்படங்களையும் கொண்டு வரலாம். 11,12-ம் வகுப்பு குறைவாக படித்தவர்கள் மாற்றுச்சான்றிதழில் மற்றும் 8-ம் வகுப்பு சான்றிதழிலும் படித்த பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் மேலொப்பம் பெற்று வரவேண்டும். அதேபோல், முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் உரிய அலுவலகத்திலிருந்து உறவு முறை தொடர்பான சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தையும், திருச்சி ராணுவ சேர்ப்பு அலுவலக 0431-2412254 என்ற தொலைபேசி எண்ணிலும், www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியை அணுகுமாறும் விண்ணப்பதாரர்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.