விருதுநகர் அருகே பைக் மோதிய விபத்தில் காயம் அடைந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே குப்பாம்பட்டியைச் சேர்ந்தவர் பாபு(40). இவர் வெள்ளிக்கிழமை மாலையில் வச்சக்காரப்பட்டியில் இருந்து சாத்தூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சாலையோரத்தில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி காலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் பாபு மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரி்தது வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.