காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவை அரிமா சங்கம், பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்கா கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் பொழுபோக்காக வந்து சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டது. இந்த நிலையில் பூங்காவை பராமரிக்கும் பணியை செய்வதாக அரிமா சங்கம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அண்ணா அரிமா சங்க தலைவர் கே. சுடர்மணி தலைமையில் சனிக்கிழமை பூங்காவை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உதவியுடன் இந்த பூங்காவில் புதர்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.