விருதுநகர் அரசு ஐடிஐ யில் மின்கம்பியாள் உதவியாளர் பணிக்கு தகுதிகாண் தேர்வு
விருதுநகரில் உள்ள அரசு ஐடிஐ யில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 28.11.15 மற்றும் 29.11.15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.


விருதுநகரில் உள்ள அரசு ஐடிஐ யில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 28.11.15 மற்றும் 29.11.15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்கு தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையில் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேரியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையில் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் மின்கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்ற 40 வயதிற்குட்பட்டவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் மின்வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பங்கள் 5.11.2015 முடிய ஏதாவது ஒரு அரசினர் ஐடிஐ யில் ரூ.10 ரொக்கமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்கள், முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், சூலக்கரை மேடு, விருதுநகர் என்ற முகவரிக்கு 5.11.15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இத் தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், சனிக்கிழமை வெளியிட்டு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...