வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் பங்கேற்பு  

நாகை மாவட்டம்,வேதாரண்யம் வேதாரண்யேசுவர் கோயில் குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் பங்கேற்றனர்.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் பங்கேற்பு  
Updated on
1 min read

நாகை மாவட்டம்,வேதாரண்யம் வேதாரண்யேசுவர் கோயில் குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் பங்கேற்றனர்.

பழமையான இந்த கோயிலின் குடமுழுக்கு விழாவையொட்டி வியாழக்கிழமை முதல் யாகசாலை பூசைகள் நடைபெற்று வந்தன.அப்போது,காசிராமகிருஷ்ண சிவாச்சாரியார் தலைமையிலான 120 சிவாச்சாரியார்கள் சமஸ்கிருத மொழியில் வேத மந்திரங்கள் ஓதினர்.

வேதங்களால் பூசிக்கப்பட்டு பின்னர் நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை சமயக் குரவர்களான திருநாவுக்கரசரும்,திருஞானசம்பந்தரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்து வைத்ததாகவும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை நினைவூட்டும் வகையில் யாகசால பூசை காலத்தில் அவ்வப்போது திருத்தணி சாமிநாதன் தலைமையிலான தேவார ஓதுவா மூர்த்திகள் தமிழ்ப் பதிகம் பாடி வந்தனர்.

அப்பர்,சுந்தரர்,தென் மறைக்காடர்,காலபைரவர் உள்பட 41 பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெற்றது. இன்று காலை 7.25 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9.45-க்கு பிரதான விமானம், 2 ராஜகோபுரங்கள் உள்பட 9 சன்னதிகளில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்,மாவட்ட ஆட்சியர் சு.பழனிச்சாமி, சட்டப் பேரவை உறுப்பினர் என்.வி.காமராஜ் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com